4 வருடங்களுக்கு பிறகு.. ரீஎன்ட்ரி ஆகும் லக்ஷ்மி மேனன்.. ஆளே மாறிட்டாங்களே.. ஹீரோ யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்அறிமுகமான ஒரு சில படங்களிலேயே தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகை லஷ்மி மேனன். கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த 'றெக்க' படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் அவர் தனது படிப்பை மேற்கொள்ள போவதாக கூறி கொஞ்ச நாள் நடிப்பிற்கு முழுக்குப்போட்டார்.

இந்நிலையில் அவர் உடல் எடையை குறைத்து வேற லெவலில் திரும்பி வந்திருக்கிறார். இம்முறை மீண்டும் 'கும்கி' படத்தில் அவருடன் நடித்த விக்ரம் பிரபுவுடன் நடிக்க இருக்கிறார். இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் மற்றோரு ஹீரோயினாக நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். இவரும் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜீவாவுடன் 'சங்கிலி புங்கிலி கதவை திற' படத்தில் நடித்திருந்தார். இப்படி இரண்டு முக்கிய நடிகைகள் ரீஎன்ட்ரி கொடுக்கப்போகும் இந்தப் படம் எப்படி இருக்கப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.