#BREAKING ரஜினி - கமல் இணையும் தலைவர் 169 : ஷூட்டிங் பற்றிய செம அப்டேட்ஸ்! கமல் கேமியோவா.?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினியை வைத்து கமல் தயாரிக்கவிருக்கும் தலைவர்-169 படத்தை பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

ரஜினி - கமல் தலைவர் 169 ஷூட்டிங் | rajini and kamal unite for thalaivar 169

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக தொடர்ந்து நீடித்து வருபவர்கள் ரஜினியும் கமலும். அபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலே உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினர். இதையடுத்து தனித்தனி பாதைகளில் பயணித்து வந்த இருவரும், மீண்டும் இணையப்போவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தை குறித்த முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. ரஜினியை வைத்து கமல் தயாரிக்கும் தலைவர் 169 படத்தின் பூஜை, வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் எனவும், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor