மாமனிதனை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Zee Tamil bags Satellite rights of Vijay Sethupathi's Maamanithan

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கி வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி முன்னணி நடிகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன், குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜுவல் மேரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் சேட்டிலைட் உரிமத்தை ஜீ டிவி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இப்படத்தை எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தை தவிர ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘கடைசி விவசாயி’, ‘சிந்துபாத்’, விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிகர் விஜய் சேதுபதி பிசியாக நடித்து வருகிறார்.