கலை மீதான புரிதலை மாற்றிய இந்திய பயணம் - பிரபல ஹாலிவுட் நடிகர் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தன் அனுபவத்தை வில் ஸ்மித்ஸ் பக்கெட் லிஸ்ட் என்னும் பெயரில் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது இந்தியா வந்துள்ள ஸ்மித், ஹரித்வார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார்.

Will Smith shares his thought about his india visit

மேலும் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான கரண் ஜோகர் ஆகியோருடன் நிகழ்வு ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்த காட்சிகள் கரன் ஜோகரின் ஸ்டூடன்ட் ஆஃப் தி  இயர் படத்தில் இடம் பெறவுள்ளன.

இந்நிலையில் இந்திய பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ள அவர், கடவுள் நமக்கு அனுபவம் மூலமாகவே கற்றுக்கொடுப்பார் என்று எனது பாட்டி அடிக்கடி சொல்லுவார்.

இந்தியாவில் பயணம் செய்யும் போது அங்குள்ள வண்ணம், மக்கள், இயற்கை அழகு ஆகியவை மூலம் கிடைத்த அனுபவங்கள், வாழ்க்கையின் மீதான எண்ணம், என்னுடைய கலை, உலகின் உண்மை ஆகியவை குறித்த என்னுடைய புரிதலை மாற்றியுள்ளது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.