திருமணத்துக்கு தயாரான புதுமாப்பிள்ளை விஷால்- நிச்சயதார்த்தம் எங்கே தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vishal’s engagement on March 16th in hyderabad

‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளரகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் விஷால் பதவி வகித்து வருகிறார்.

விஷாலின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், கடந்த ஜன.16ம் தேதி தான் திருமணம் செய்துக் கொள்ளவிருக்கும் பெண்ணை பற்றிய அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் வெளியிட்டார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக விஷால் அறிவித்திருந்தார். அப்பெண், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘பெல்லிச்சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வரும் மார்ச்.16ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.