பிரபல இயக்குநரும், நடிகரும், அரசியல்வாதியுமான டி.ராஜேந்தர், தனது இளைய மகன் குரளரசனின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் போலி அக்கவுண்ட்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் டி.ராஜேந்தர், எனக்கும் என் மகன் குரளரசனுக்கும் சமூக வலைதளங்களில் எந்த அக்கவுண்ட்டும் இல்லை; என் மகன் பெயரில் பொய்யான அக்கவுண்ட்டில் இருந்து தவறான செய்திகளை பரப்புகின்றனர். சைபர் கிரைமில் புகார் கொடுக்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞன் என் இளைய மகன் குரளரசன், அவருக்கும் அரசியலுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை. அவர் குறானரசன் என பெயரை மாற்றிக் கொண்டதாகவும், அவரது பெயரிலான போலி அக்கவுண்ட்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.
லட்சிய தி.மு.க.வை பயன்படுத்தி குறளரசன் மீது அரசியல் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று நான் சொல்லவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். அதற்கு இன்னும் அதிக நேரம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என் மகன் பேருக்கு களங்கம் விளைவிப்பதா? கொந்தளித்த டி.ஆர் வீடியோ