சேட்டை விமர்சனத்துக்கு 40 நிமிஷம் கழுவி ஊத்திட்டாரு- பூமராங் இயக்குநர் பற்றி ஆர்.ஜே.பாலாஜி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அதர்வா நடித்துள்ள ‘பூமராங்’ திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச்.8ம் தேதி ரிலீசாகவுள்ளது.

RJ Balaji opens up on working with Director R.Kannan in Boomerang

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள ‘பூமராங்’ திரைப்படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, பூமராங் திரைப்பட்ம குறித்தும், அதில் பணியாற்றியவர்கள் குறித்தும் பேசினார். அப்போது பேசிய அவர், இயக்குநர் ஆர்.கண்ணனின் ‘சேட்டை’ திரைப்படத்தை விமர்சனம் செய்தபோது, போன் செய்து சுமார் 40 நிமிடம் கழுவி ஊத்தினார். பின், ‘இவன் தந்திரன்’ திரைப்படத்திற்காக சந்தித்தோம்.

அந்த படத்தின் கதை பிடித்திருந்ததால், நடித்தேன். மேலும், பூமராங் ஷூட்டிங்கில் தான் ‘எல்.கே.ஜி’ திரைப்படம் உருவானதில் இந்த படக்குழுவினருக்கு மிகுந்த பங்கு இருக்கிறது என்றார். எல்.கே.ஜி கதை உருவாக உதவியவர்களுக்கு நன்றி என கூறினார்.

சமூக அக்கறைக் கொண்ட கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் வழங்கியுள்ளார் எனவும் ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

சேட்டை விமர்சனத்துக்கு 40 நிமிஷம் கழுவி ஊத்திட்டாரு- பூமராங் இயக்குநர் பற்றி ஆர்.ஜே.பாலாஜி வீடியோ