www.garudabazaar.com

சென்னையின் பிசியான பகுதியில் ரஜினியின் "அண்ணாத்த" பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"விஸ்வாசம்" படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா, முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் "அண்ணாத்த" படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். 

rajinkanth annathe final shedule shooting in chennai

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரான ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். "விஸ்வாசம்" படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.  

rajinkanth annathe final shedule shooting in chennai

ரஜினிகாந்துடன், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகியோரும் நடிகர்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

rajinkanth annathe final shedule shooting in chennai

படத்தின் முந்தைய படப்பிடிப்புகள் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், கலை இயக்குனர் மிலன் தலைமையில் செட்கள் போடப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்றன.

rajinkanth annathe final shedule shooting in chennai

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னை வடபழனியில் உள்ள விஜயா பாரம் மாலில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.  இந்த படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

"அண்ணாத்த" திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னையின் பிசியான பகுதியில் ரஜினியின் "அண்ணாத்த" பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

rajinkanth annathe final shedule shooting in chennai

People looking for online information on Ajith Kumar, Annaatthe, D Imman, Keerthy Suresh, Kushboo Sundar, Meena, Nayanthara, Rajinikanth, Siruthai Siva, Soori, Sun pictures, Vetri, Viswasam, Viswasam Tamil will find this news story useful.