நடிகை நயன்தாரா-வை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த நடிகர் ராதாரவி, திமுகவின் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சில சர்ச்சைகுரிய கருத்துக்களை தெரிவித்தார்.
நடிகர் ராதாரவியின் சர்ச்சைக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், திமுக தலைமை கழகம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவிர திமுக தலைவர் ஸ்டாலினும் நடிகர் ராதாரவியின் கருத்து ஏற்க இயலாது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் தனது ட்வீட்டில், பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். pic.twitter.com/vEM2Eri2zN
— M.K.Stalin (@mkstalin) March 25, 2019