'நான் அமைத்திருக்கும் கூட்டணியால் வெற்றி வாய்ப்பு உறுதி'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கும் படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7' . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

Parthiepan says about santhosh narayanan, Ramji in Otha seruppu size 7

இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய பார்த்திபன், வழக்கமான , வித்தியாசமான - இப்படி எதிர்மறையான இரு வார்த்தைகளை இணைத்தே என் படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு நான் எதிர்பாராமலே ஏற்பட்டு விடுகிறது. அதை ஈடு செய்யும் விதமாக நானும் கடுமையாக உழைத்து காப்பி அடிக்காமல் சிந்தித்து இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக புத்தம் புதிய அணுகுமுறையிலான திரைக்கதையே 'ஒத்த செருப்பு சைஸ் 7'.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஓட்டு வாங்கிவிட வேண்டும் என சுய கௌரவத்தை விட்டுக் கொடுத்தும் மானம் மரியாதைக்கு விடுமுறை கொடுத்தும் கூட்டணி அமைப்பதைப் போல் இல்லாமல், இப்படத்தில் நான் அமைத்திருக்கும் கூட்டணியால் வெற்றி வாய்ப்பு உறுதியாகிறது.

நான் நேசிக்கும் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுடன் இணையும் முதல் படம். ஒத்த பாட்டில் மொத்த கதையையும் அதில் காதலையும் சோகத்தையும் கருப்பு வெள்ளை கட்டைகளாக வாசித்து பிரம்மிக்க வைத்திருக்கிறார்.

மேலும் ஒளிப்பதிவில் உச்சம் தொட்ட ராம்ஜியுடன் நான் இணையும் முதல் படம். பாகுபலியின் வெற்றிக்கு பின்னும் ஆயிரத்தில் ஒருவனின் பெருமையை சொல்லும் சூத்திரதாரிகளின் முக்கியமானவரான ராம்ஜியின் திறமைக்கு சவாலான இன்னொரு படம் இது என்றார்.