பிரபல இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதுவரை அவரை சந்தித்து பேசிய அனைத்து தருணங்களும் இனிமையாக இருந்தது. இன்று ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன வைச்சு எப்போ சார் படம் இயக்குவீங்கன்னு கேட்டுட்டே இருப்பேன். கஷ்டமா இருக்கு’ என்றார். விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சீதக்காதி’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார்.
இதேபோல், ‘நிமிர்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தை கதாபாத்திரத்தில் இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார். அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய உதயநிதி, அவருடன் நடித்ததில் பெருமையாக உணர்கிறேன். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் தனக்கு தந்தை போல் அலோசனைகள் கூறியுள்ளார். திமுக தலைவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் வர முடியவில்லை. மகேந்திரன் சாரின் மறைவு சினிமாவிற்கு மட்டுமின்றி மக்களுக்கும் பெரும் இழப்பு என கூறியுள்ளார்.
அவர் இயக்கத்தில் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டேன் - விஜய் சேதுபதி உருக்கம் வீடியோ