அதர்வா - மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான 'பூமராங்' உருவான விதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இவன் தந்திரன்' படத்துக்கு பிறகு ஆர். கண்ணன் இயக்கியிருக்கும் படம் 'பூமராங்'. விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர்.

Making Video released from Atharva and RJ Balaji's Boomerang

ரதன் இசையமைத்துள்ள இந்த படம் இந்த வாரம் (மார்ச் 8) ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த படத்தை மசாலா பிக்ஸ் சார்பாக இயக்குநர் ஆர்.கண்ணனே தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் உருவான விதம் குறித்த வீடியோ Behindwoods TV யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், அதர்வா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் இணைந்து ஏரி ஒன்றை வெட்டும் காட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. மேலும் வீடியோவில் நடிகர் அதர்வா, இந்த படத்தில் தான் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

பூமராங் வெளியாகும் முன்பே இயக்குநர் ஆர்.கண்ணன் மற்றும் அதர்வா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் பணிபுரியவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் அது சார்ந்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதர்வா - மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான 'பூமராங்' உருவான விதம்! வீடியோ