'பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பியார் பிரேமா காதல்' படத்துக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் படம் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்'. இந்த படத்தை புரியாத புதிர் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Harish Kalyan shares his experience with team Ispade Rajavum Idhaya Raniyum

இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.  இந்த படத்தை மாதவ் மீடியா சா்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஹரிஸ் கல்யாண் தெரிவித்திருப்பதாவது,

'இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணம், இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்து தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடம் பெற்று தரும்.

கதாநாயகி ஷில்பா மிகவும் உன்னதமான  நடிகை.  அவருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பெருமையே. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி கப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்  காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். இது காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால்  மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது.

இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். இந்த உண்மையை நாங்கள் பிரச்சாரமாக  சொல்லவில்லை ஆனால் ஆழமாக சொல்கின்றோம்.  என்னுடைய கதாபாத்திரமான கௌதம் எல்லா இளைஞர்களையும் கவரும்.  இந்தப் படத்தின் கதாநாயகன் கௌதம் லே, லடக் ஆகிய இடங்களுக்கு தன்னை இனம் கண்டு கொள்ள செல்கிறான். இந்த காட்சி ரசிகர்களை மிகமிக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை' என்றார்.