மிகவும் பிரபலமான சின்னத்திரை நட்சத்திரமான திவ்யதர்ஷினி(எ) டிடி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் டிவி தொகுப்பாளராக 20 ஆண்டுகால பயணத்தை டிடி கொண்டாடினார்.

தமிழ் சினிமாவில் ‘நளதமயந்தி’, ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள டிடி தற்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
அனில் பதூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரொமாண்டிக்’ என்ற படத்தில் டிடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆகாஷ் பூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சார்மி கவுரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்னாத் தயாரித்துள்ளார். இந்நிலையில், டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக டிடி தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களை தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களை கவரவிருக்கும் டிடிக்கு Behindwoods-ன் வாழ்த்துக்கள்.
So happpy to finish the first schedule of #Romantic movie with my sweetheart Hero @ActorAkashPuri 😍 fun working... Thnks for the love n respect dear team n spl Thnks @purijagan sir 🙏 for trustin me n @Charmmeofficial darling n director @anilpaduri garu 🙏🙏 @PuriConnects #Goa pic.twitter.com/Uk3xpS2MyH
— DD Neelakandan (@DhivyaDharshini) March 24, 2019