Breaking: சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Breaking: Director Bharathiraja roped in for an important role in Sivakarthikeyan's SK16

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK16 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்கவிருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. SK16 திரைப்படத்தின் ஷூட்டிங் ஏப்.22ம் தேதி முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும், படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.