'அவெஞ்சர்ஸ்' திரைப்பட வரிசையில் நான்காவதாக உருவாகியிருக்கும் படம் 'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்'. இந்த படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சூப்பர் ஹீரோஸ்கள் இணைந்து வில்லனான தனோஸை தேடிப்பிடிப்பது குறித்து விவாதித்துவருகின்றனர்.
'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு விஜய் சேதுபதி ஆண்ட்ரியா ஆகியோர் டப்பிங் பேசியுள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' வீடியோ இதோ வீடியோ