Super Deluxe All Banner USA

அமெரிக்காவில் விசாரணை; விவேக்கின் மிரட்டலான டிரைலர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகர் விவேக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Actor Vivek's Next Vellai Pookal trailer has been released

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிந்திக்க வைக்கும் காமெடிகளில் கலக்கியவர் நடிகர் விவேக். இவர், ‘நான் தான் பாலா’, ‘பாலக்காட்டு மாதவன்’ போன்ற திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விவேக் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’, தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் விவேக் நடித்து வருகிறார்.

இதனிடையே, இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் ‘வெள்ளைப்பூக்கள்’ என்ற திரைப்படத்தில் விவேக் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவின் சியாட்டில் நடைபெற்று வருகிறது. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

இண்டஸ் எண்ட்ர்ப்ரைசஸ், ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிரபல ஸ்ட்ரீமிங் தளமான டெண்ட்கொட்டா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் ஏப்.19ம் தேதி வெளியாகிறது. இது டெண்ட்கொட்டா நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் விசாரணை; விவேக்கின் மிரட்டலான டிரைலர் இதோ வீடியோ